காணொளி: சர்க்காரியா கமிஷன் குறித்த விஜயின் குற்றச்சாட்டும் ஸ்டாலின் பதிலும்

காணொளிக் குறிப்பு, சர்க்காரியா கமிஷன் குறித்த விஜயின் குற்றச்சாட்டும் ஸ்டாலினின் பதிலும்
காணொளி: சர்க்காரியா கமிஷன் குறித்த விஜயின் குற்றச்சாட்டும் ஸ்டாலின் பதிலும்
பிரசுரிக்கப்பட்டது

தமிழக சட்டப்பேரவையில் சர்க்காரியா கமிஷன் அறிக்கையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகளை திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் செப்டம்பர் 7ஆம் தேதி காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது 1970களில் திமுக ஆட்சியில் இருந்தபோது நடந்த ஊழல்கள் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக விஜய் சுட்டிக்காட்டினார். குறிப்பாக வீராணம் ஏரி திட்டத்திற்கான குழாய் டெண்டர்களை சத்யநாராயண பிரதர்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கியதில் நடந்த ஊழல் குறித்து விரிவாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த பின்னணியில் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொளி ஒன்றை வெளியிட்டார். முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து தவறான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் முன்வைத்திருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார். சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்ட பிறகு ஒன்றியத்திலும் மாநிலத்திலும் பலமுறை அரசுகள் மாறிவிட்டதாக குறிப்பிட்ட ஸ்டாலின் இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் ஏதேனும் உண்மை இருந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என தெரிவித்தார். காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டுகளை முதலமைச்சரும் சொல்லிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு