இசை நிகழ்ச்சியின் நெரிசல்களுக்கு நடுவே ஓவியம் வரையும் கலைஞர்

காணொளிக் குறிப்பு,
இசை நிகழ்ச்சியின் நெரிசல்களுக்கு நடுவே ஓவியம் வரையும் கலைஞர்
பிரசுரிக்கப்பட்டது

இசை நிகழ்ச்சிகளில் ஆரவாரமாக நடனமாடும் ரசிகர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு தான் வரையும் ஓவியங்களை இணையத்தில் பகிர்வதன் மூலம் ஒரு கலைஞர் ஆயிரக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

பிரிட்டனின் யார்க்‌ஷயர் பகுதியைச் சேர்ந்த சாம் ஜோஸ்பரி, மேடைக்கு அருகில் பார்வையாளர்கள் நடனமாடும் நெரிசலான பகுதியில், கூட்டத்தோடு நின்றுகொண்டே தனது சில சிறந்த படைப்புகளை உருவாக்குகிறார். 22 வயதான இவர், கடந்த ஆண்டு இசை நிகழ்ச்சிகளில் ஓவியம் வரையத் தொடங்கினார்.

ஒரு பொழுதுபோக்காகத் தொடங்கிய இந்தப் பழக்கம், தற்போது அவரைப் பல இசை நிகழ்ச்சிகளில் ஓவியம் வரைய வைத்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு