காணொளி: மதுபானக் கடைக்குள் புகுந்து தாக்கிய சிறுத்தை

காணொளிக் குறிப்பு, சிறுத்தை
காணொளி: மதுபானக் கடைக்குள் புகுந்து தாக்கிய சிறுத்தை
பிரசுரிக்கப்பட்டது

ராஜஸ்தானில் உள்ள ஒரு மதுபானக் கடைக்குள் சிறுத்தை நுழைந்து விற்பனையாளரைத் தாக்கிய சிசிடிவி காட்சி இது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்திற்கு முன்பாக, அந்தச் சிறுத்தை கடைக்குள் இருந்த துப்புரவுப் பணியாளர் ஒருவரையும் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், சிறுத்தை கடையின் பணம் செலுத்தும் இடத்துக்கு அருகில் பதுங்கிக் கொண்டதால், இரு ஊழியர்களும் அங்கிருந்து தப்பிச் செல்ல முடிந்தது.

அதனைத் தொடர்ந்து, பிறர் உதவியுடன் கடை மூடப்பட்டு, சிறுத்தை உள்ளேயே சிக்கவைக்கப்பட்டது.

சுமார் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு, வனத்துறை அதிகாரிகள் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி அதைப் பிடித்தனர்.

பின்னர் அந்தச் சிறுத்தை மீண்டும் இயற்கை வாழ்விடமான காட்டுப் பகுதிக்குள் விடுவிக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு